தியேட்டரில் சலுகை விலையில் திரைப்படங்கள் பார்க்கலாம் - புதுச்சேரியில் புதிய அறிவிப்பு

கோப்பு படம்

அக்டோபர் 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். திரைப்படங்கள் வெளியாகாததால் தயாரிப்பாளர்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கலாம் என்றும் அதற்கான வழிகாட்டுநெறிமுறைகளையும் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. புதுச்சேரியில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதுவை சண்முகா திரையரங்கம் ரூ.120.க்கு விலையுடைய டிக்கெட் ரூ.100.க்கும், ரூ.100 ரூபாய்க்கான டிக்கெட் ரூ.75.க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. படம் பார்க்க வருவோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என்று சண்முகா திரையரங்கம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

போட்டி அட்டவணை

தற்போது எந்த புதிய படமும் வெளியாகாத சூழலில் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: