Home /News /entertainment /

புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட டைட்டில்!

புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட டைட்டில்!

டைட்டில் படம்

டைட்டில் படம்

மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக் பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதிய தமிழ் படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

படத்தைக்கூட எடுத்துவிடுகிறார்கள். அதற்கு ஒரு பெயரை வைப்பதற்குதான் பலரும் திணறுகிறார்கள். கேட்சிங்காக இருக்கணும், மூன்று சென்டர் ரசிகர்களுக்கும் புரியணும், எதிர்மறையாக இருந்திடக் கூடாது, வேறு யாரும் வைத்த பெயராகவோ, பதிவு செய்திருக்கும் பெயராகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக வாயில் நுழைகிற பெயராக இருக்க வேண்டும்.

இந்த பஞ்சாயத்தெல்லாம் எதற்கு என்று படத்தின் டைட்டிலுக்கு டைட்டில் என்றே பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டிலை தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். டைட்டில் என்ற இந்தப் படத்தை டி.பி.கே. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ளார். ரகோத் விஜய் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக் பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினரை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து படப்பெயரை வெளியிட்டுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. அப்போது அவர் அடித்த கமெண்ட், 'டைட்டிலுக்கே டைட்டிலா?'

மேலும் படிக்க - ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை

டைட்டிலுக்கு எஸ்.எம்.தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய அனல் ஆகாஷ் இசையமைத்துள்ளார். சண்டைப் பயிற்சி மிரட்டல் செல்வா. டைட்டில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யாவும், நடிகை சிம்ரனும் வெளியிட்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி