Home /News /entertainment /

ஆண் பெண் நட்புக்கு தனி இலக்கணம் சொன்ன புது வசந்தம்!

ஆண் பெண் நட்புக்கு தனி இலக்கணம் சொன்ன புது வசந்தம்!

புது வசந்தம்

புது வசந்தம்

தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகள், இப்படத்திற்கு கிடைத்தது.

  ஆண் பெண் நட்புக்கு தனி இலக்கணம் வகுத்து ஆணும், பெண்ணும் இறுதி வரை நட்பாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்திய திரைப்படம் ‘புது வசந்தம்’. இத்திரைப்படத்தினை பற்றிய ஒரு தொகுப்பு. 

  ’புதிய பாதை’ திரைப்படத்தில் பார்த்திபனிடம், உதவியாளராக பணியாற்றிய விக்ரமன் இயக்கிய முதல் திரைப்படம் ’புது வசந்தம்’. கனவுகளோடு வாழ்க்கையைத் தேடும் நான்கு ஆண்களுக்கும் இவர்களோடு வழிமாறி வந்து சேரும் ஒரு பென்ணுக்குமான நட்பினை ஒரு கள்ளம்கபடமற்ற கதையாக சொல்லி வெற்றி பெற்ற இத்திரைப்படம் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, இயக்குனர் விக்ரமன், பட நாயகன் முரளி. இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் ஆகிய அனைவருக்குமே திரையுலகில் ஒரு வசந்தகாலத்தை அமைத்துத் தந்தது

  சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?

  முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி ஆகிய நான்கு நண்பர்களின் கூட்டத்தில், எதிர்பாராத விதமாக வந்து சேர்வார் சித்தாரா. வாழ்வாதாரத்திற்கு வீதியில் பாடி சிரித்து இக்கூட்டம் மகிழந்தது. . இந்நிலையில் சித்தாராவின் காதலன் வந்துசேர ’நட்பா, காதலா’ என்ற நிலையில், சித்தாரா என்ன முடிவெடுத்தார் என்பதை கண்கள் பனிக்க சொன்னார் இயக்குனர் விக்ரமன்.

  Pudhu Vasantham Movie boys girls freindship movies in tamil murali chithara combo vikraman Pudhu Vasantham songs

  நட்பை மையமாகக் கொண்டு அனேக திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ’புது வசந்தம்’ சொன்ன ஆண் பெண் நட்பு அக்காலகட்டத்தில் எங்கும் பேசு பொருளானது. அதோடு ஆழமிக்க கதை, எளிய திரைக்கதை, தாளம் போடச் செய்த பாடல்கள் என, ரசனையான கலவையில் வெளியாகி, தமிழ் குடும்பங்களின் பேராதரவையும் பெற்றது ‘புது வசந்தம்’.

  கடைசி நேரத்தில் பார்வதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! விக்கியால் நின்றதா கல்யாணம்?

  புது வசந்தம் தென்றலாய் வீசிட பக்கபலமாய் இருந்தது எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசை. 'ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்’, ’கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சி’, ’இது முதல் முதலா வரும் பாட்டு’, 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா’, ’போடு தாளம் போடு...' என அனைத்து பாடல்களும் ஹிட் வரிசையில் இடம் பெற்றன.

  தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகள், இப்படத்திற்கு கிடைத்ததோடு தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கி திரை வானில் புது வசந்தத்தை வீசியது இந்த புது வசந்தம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Tamil Cinema

  அடுத்த செய்தி