'நாம் தமிழன் தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்டால், பதில் இல்லை. வரலாறை தெரிந்து கொள்வது முக்கியம் ' என நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த அறிமுகத்தோடு தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் பேசுகையில் இந்த திரைப்படத்தை ஒரே பாகமாக எடுக்க முயற்சித்தோம். ஆனால் கதை பெரியது இதன் காரணமாக இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறினார். இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே சோழர்களை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அது செப்டம்பர் 30 வரை மட்டும் தான். அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக சோழர்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள் என கூறினார்.
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கார்த்தி பேசுகையில், நமக்குத் தெரிந்த கொஞ்ச வரலாறில் நாம் எப்படி ஆளப்பட்டோம்? எப்படி சூறையாடப் பட்டோம்? என்று தெரியும். இருந்தாலும் நாம் தமிழன் தமிழன் என்று கூறிக் கொள்கிறோம். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்டால் பதில் இல்லை. அதை தெரிந்துகொள்வது அவசியம் என கூறினார்.
கார்த்தியை தொடர்ந்து பேசிய த்ரிஷா, மணிரத்னத்தின் கனவு படத்தில் குந்தவையாக நடித்தது மகிழ்ச்சி. இது மிகப் சிறந்த Pan India படமாக இருக்கும் என கூறினார். அதேபோல் விக்ரம் பிரபு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து நடிப்பது மல்டி ஸ்டார் படம் அல்ல. இதில் 30 பேர் சேர்ந்து நடித்திருக்கிறோம். இதுதான் மல்டி ஸ்டார் படம் என்றார்.
இந்த திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, இதைவிட தன் வாழ்வில் சிறந்த விஷயம் எதுவும் நடந்தது இல்லை என தெரிவித்தார். பொன்னியின் செல்வனை நம் படம் என சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசுகையில், இது இந்தியாவின் படம் என குறிப்பிட்டார்.
‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம்’ – டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேச்சு
இறுதியாக பேசிய மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர் எடுக்க வேண்டியது. ஆனால் நடக்காமல் போனது. அதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது. எங்களுக்காக அவர் விட்டு வைத்துவிட்டு சென்றிருக்கிறார் என தெரிவித்தார்.
பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி பெரும் பரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Karthi, Actress Trisha, AR Rahman, Kollywood, Mani rathnam, Ponniyin selvan, Tamil Cinema