ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமெரிக்கா மட்டும் இல்லை... இந்த நாடுகளிலும் வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்

அமெரிக்கா மட்டும் இல்லை... இந்த நாடுகளிலும் வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழில் கடந்த 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவில் தொடர்ந்து இன்னும் நான்கு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் நிகழ்த்தியுள்ளது.

தமிழில் கடந்த 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையிட்ட பெரும்பாலான இடங்கள் நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த திரைப்படம் 10 நாட்களில் 55 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து ரஜினிகாந்தின் 2.0 படத்தின் சாதனையை நேற்று முறியடித்தது.

இந்த நிலையில் தற்போது UK என அழைக்கப்படும் இங்கிலாந்து,  ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

Also read... விக்னேஷ்சிவன், நயன்தாராவிடம் வாடகைதாய் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு!

இந்த ஐந்து நாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான வசூல் இன்னும் குறையாமல் உள்ளது.  இதன் காரணமாக மேலும் பல சாதனைகளை பொன்னியின் செல்வன் அங்கு நிகழ்த்தும் என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan