முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'தளபதி 67' அசத்தல் அப்டேட்.. இன்று மாலை வெளியாகும் சூப்பர் நியூஸ்.. குஷியில் விஜய் ரசிகர்கள்!

'தளபதி 67' அசத்தல் அப்டேட்.. இன்று மாலை வெளியாகும் சூப்பர் நியூஸ்.. குஷியில் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

அவர் மறுப்பு தெரிவிக்காததால் ஒருவேளை அந்தத் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கப்பட்டது. அடுத்தகட்டமாக படக்குழுவினர் காஷ்மீர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மைக்கேல் பட நிகழ்வில் கலந்துகொண்ட லோகேஷ், தளபதி 67 பட அப்டேட் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவித்தார்.

விக்ரம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் படத்தின் டீசர் வெளியிட்டதைப் போல தளபதி 67 படத்துக்கும் டீசர் வெளியிடப்படவிருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பு தான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. விஜய் படம் என்றால் ஆக்சன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். ஆனால் தளபதி 67 படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறாரா என செய்தியாளர்கள் லோகேஷிடம் கேட்டபோது இதுகுறித்து இப்பொழுதே தெரிவித்தால் சர்ப்ரைஸ் போய்விடும். அப்டேட் வரும்போது தெரிந்துகொள்ளுங்கள் என்றார். அவர் மறுப்பு தெரிவிக்காததால் ஒருவேளை அந்தத் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் இன்று மாலை 6.07க்கு வெளியாகும் என்று இந்தப் படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆம் தேதிகளில் வெளியாகும் அப்டேட்டுகளின் அப்டேட்டாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published: