விஷால் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷால் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு
நடிகர் விஷால்
  • News18
  • Last Updated: December 19, 2018, 4:58 PM IST
  • Share this:
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களில் ஒருதரப்பினர், தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக விஷால் செயல்படுவதாக கூறியும், பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் சென்ற அவர்கள் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு எதிரக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் கதிரேசன் போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தலைவர் அறைக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூட்டுப் போட்டு கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர், பொதுக்குழுவை ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பொதுக்குழுவைக் கூட்டினால் அனைவரும் வரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேசிய அவர்கள், “நடிகர் விஷால் தலைமையிலான அணிக்கு பதவிக்காலம் முடிந்துவிட்டது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. தயாரிப்பாளர்களின் வாழ்வதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கும் செய்தி துறை அமைச்சரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். நடிகர் விஷால் பதவி விலக வேண்டும்” என்றும் கூறினார்.

காவலர்களிடம் தகாத முறையில் வாக்குவாதம் செய்த பெண் அரசியல் பிரமுகர் - வீடியோ

First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்