Home /News /entertainment /

‘சினிமா டிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

‘சினிமா டிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நடைபெறுகிறது.

Online Cinema Ticket : தமிழகத்திலும் ஆந்திர நடைமுறை பின்பற்றப்பட்டால் மக்கள் பலனடைவார்கள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

  • Last Updated :
திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணையதளம் மூலம் தான் பதிவு செய்ய வேண்டும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த முறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.  இதன் மூலம் தங்களுக்கான கட்டணம் குறையும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு அளித்த பேட்டியில், ‘’ஆந்திர முறை குறித்து பொதுமக்களிடம் எழுந்த எதிர்பார்ப்பு தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் எழுந்துள்ளது. ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் டிக்கெட் முறை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோள் மற்றும் நோக்கமாக உள்ளது.

மக்களிடமிருந்து திரட்டப்படும் பணம்  தனியார் நிறுவனங்களுக்கு செல்கிறது. இதனால், அரசுக்கும் பலன் இல்லை, மக்களுக்கும் பலன் இல்லை.

இதையும் படிங்க - யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விக்ரம் பட பாடல்…

எனவே ஆந்திர மாநிலத்தின் முடிவை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நல்ல தீர்வு கண்பார் என நம்புகிறோம். அந்த முறையை நடைமுறைபடுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகின் சார்பாக கேட்டுகொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இதேபோன்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கதிரேசன் பேசுகையில், ஆன்லைன் முன்பதிவு கட்டணம் தொடர்பான ஆந்திர அரசின் திட்டத்தை செய்தி வாயிலாக அறிந்தோம்.  கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டால், சினிமா துறைக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்.  சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பேசி இந்த திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை தொடர்ந்து, பாரதிராஜா தலைமையில் இயங்கும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவா இது குறித்து கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க - கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

அவர் பேசுகையில் ‘ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் வருமானம் அரசிற்கு கிடைக்க வேண்டும். LBET வரியில் ஏற்படும் நஷ்டத்தை இந்த வருமானம் மூலம் ஈடு செய்யலாம். சினிமா என்பது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சேர்ந்த ஒரு கூட்டுக்குடும்பம். அதில் நஷ்டம் வரும் பொழுது மட்டும் தயாரிப்பாளர் என்ற பிரிவு மட்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது.

லாபம் வரும் பொழுது அதில் சம்பந்தமில்லாத வகையில் இருக்கிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும். இது அரசுக்கும் பலன் இல்லை பொது மக்களுக்கும் பலன் இல்லை. இதை நாங்கள் இப்போது கேட்கவில்லை. இது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. இப்போது இருக்கும் அரசாங்கம் சினிமாவை நேசிக்கும் அரசாங்கம். எனவே இதை நடைமுறைப்படுத்திக்கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்’ என கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் நடைமுறையை தமிழகத்தில் செயல்படுத்துவது என்பது, தயாரிப்பாளர்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகள் கணினி மூலம் இணைக்கபட்டுள்ளன. இதற்கான முயற்சியை முந்தைய அரசு இருந்தபோதே எடுத்தோம். அதற்கான பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டனர், திரையரங்க உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால் பேச்சு வார்த்தைகள் முடிந்த நிலையில் அதை நடைமுறைபடுத்தவில்லை. தற்போதைய அரசும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதை நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர் இளங்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இவ்வாறு கருத்து தெரிவிக்கும் நிலையில் தமிழகத்தில் அரசே திரைப்பட டிக்கெட் விற்பனையை ஏற்று நடத்தினால், அது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகிறார். அவ்வாறு நடந்தால் சில திரையரங்குகள் அரசை ஏமாற்றி வரி கட்டாமல் உள்ளன. அவை கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கிறார்.

ஆந்திராவில் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த முறை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக செந்தில் ராஜா. 
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி