• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Theatres: திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு!

Theatres: திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

திரையரங்குகள் பார்க்கிங் கட்டணமாக இருபது ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டும் திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை ஓரளவு மட்டுப்பட்டு, ஜுலை இறுதியில் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படலாம் என பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், திரையரங்குகள் திறக்கப்படும் முன்பு அவை தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் என சில பிரச்சனைகளை பட்டியலிட்டு, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உறுதியான தலைமையும், நிர்வாகிகளும் அமைந்தும், அரசின் வழிகாட்டுதல் குழுப்படியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரம் முடக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி திரையரங்குகள் தங்கள் அதிகாரத்தை திரைப்பட வர்த்தகத்தில் வலுப்படுத்திக் கொண்டன. தற்போது இரு தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இயங்குகின்றன. இதில் ராமசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில முடிவுகளை எடுத்து, அதனை செயற்குழுவின் ஒப்புதல் பெற்று வெளியிட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படும் முன், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் என திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு..

    1. டிக்கெட் விற்பனை தமிழ்நாடு முழுவதும் கணினிமயமாக்கப்பட வேண்டும்.

    2. திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களையே சாரும். திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை.

    3. தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்றே ஆன்லைன் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் வருமானம் திரையரங்குகள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்துத் தர வேண்டும். அதேபோல் விளம்பரத்திலும் பங்கு தர வேண்டும். (இப்போது இவ்விரண்டிலும் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தருவதில்லை).

    4. சின்னப் படங்கள் வெளியாகும் போது மூன்று வகையான டிக்கெட்டுகளை விற்க வேண்டும்.

    5. வி.பி.எப் கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் செலுத்தப் போவதில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலே உள்ள தீர்மானங்களை ஒரேமனதாக நிறைவேற்றியுள்ளனர். திரையரங்குகள் திறக்கப்படும் முன் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அரசிடம் முறையிட்டு தீர்வு காண வழி செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

    திரையரங்குகள் பார்க்கிங் கட்டணமாக இருபது ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டும் திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அதேபோல் தின்பண்டங்களுக்கு, வெளியே உள்ளதைவிட பல மடங்கு விலை வைக்கப்படுகிறது. பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இவ்விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தில் எதுவும் கூறப்படவில்லை. திரைப்பட வர்த்தகம் என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உள்ளடக்கியது. அந்த உணர்வின்றி அவரவர் நலன்களை மட்டுமே பிரதானப்படுத்துவதால்தான் தமிழ் திரைப்பட வர்த்தகம் மற்ற மாநிலங்களைவிட மோசமான நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: