Home /News /entertainment /

விஷாலின் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்!

விஷாலின் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்!

விஷால்

விஷால்

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விஷால் நடித்த வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் வினோத்குமார் தெரிவித்திருக்கிறார். 

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தமிழ்,  தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் Pan Indian  திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்திருக்கிறார்.

Also read... என்.டி.ராமராவின் தெலுங்குப் படத்தில் அலெக்ஸாண்டராக கலக்கிய சிவாஜி கணேசன்

அத்துடன் இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் எனவும் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, Entertainment

அடுத்த செய்தி