முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / RB Choudary: விஷால் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பதில்!

RB Choudary: விஷால் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பதில்!

விஷால் - ஆர்.பி.செளத்ரி

விஷால் - ஆர்.பி.செளத்ரி

தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நேற்று காவல்நிலையத்தில் நடிகர் விஷால் புகார் அளித்தார். அதற்கு ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடித்த இரும்புத்திரை படத்துக்காக தயாரிப்பாளர் ஆர்.பிசௌத்ரியிடம் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அப்போது விஷால் அளித்த உறுதிமொழிப் பத்திரம் மற்றும் காசோலைகளை, கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஆர்.பி.சௌத்ரி தரவில்லை என்பது விஷாலின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக அவர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பம் இட்டு தந்த பிறகும், தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்" என்று ஆர்.பி.சௌத்ரி விளக்கமளித்துள்ளார்.

தற்போது ஆர்.பி.சௌத்ரி சென்னையில் இல்லை. சென்னை திரும்பியதும் இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor vishal