Home /News /entertainment /

என்னது..?! மகாலட்சுமிக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசமா?? தயாரிப்பாளர் ரவிந்தர் விளக்கம்…

என்னது..?! மகாலட்சுமிக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசமா?? தயாரிப்பாளர் ரவிந்தர் விளக்கம்…

வி.ஜே. மகாலட்சுமி - ரவிந்தர்

வி.ஜே. மகாலட்சுமி - ரவிந்தர்

தற்போது மணமக்கள் யூடியூப் சேனல்களுக்கு ஜாலி பேட்டி அளித்து வருகின்றனர். அவை ரசிக்கும்படியாக உள்ளதால், லைக்கும், வியூசும் குவிந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் விஜே மகாலட்சுமி. சன் மியூசிக் சேனலில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. லேடிஸ் ஸ்பெஷல், ஹலோ, வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மகாலட்சுமி தொகுத்து வழங்கியுள்ளார்.

    இது தவிர சின்னத்திரை பக்கமும் கவனத்தை செலுத்தினார்.சீரியல்களில் நடிக்க தொடங்கினார். வில்லி ரோல், லீட் ரோல் என இவரின் நடிப்பு விரிந்தது. ராதிகாவின் சித்தி 2 சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

    இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணமாகி  8 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் மகாலட்சுமி சில வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்து விட்டார். விவாகரத்தும் வாங்கி கொண்டார்.

    VJ Mahalakshmi marriage :கணவர் பற்றி மகாலட்சுமி சொன்ன வார்த்தைகள்!

    சிங்கிள் மதராக இருந்த இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரனை 2 வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்த பின்பு மகாலட்சுமி - ரவீந்தர் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இருவரும் இன்ஸ்டாவில் மாறி மாறி காதல் மழையை பொழிகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களது திருமண வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர்.

    தற்போது மணமக்கள் யூடியூப் சேனல்களுக்கு ஜாலி பேட்டி அளித்து வருகின்றனர். அவை ரசிக்கும்படியாக உள்ளதால், லைக்கும், வியூசும் குவிந்துள்ளது.

    இதற்கிடையே மகாலட்சுமிக்கும், ரவிந்தருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பது போன்ற தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவின.

    ‘திருமணம் திருமணம் என பிள்ளைகளை பெற்றோர் டார்ச்சர் செய்யாதீர்கள்…’ - சிம்பு பேச்சு

    இதுதொடர்பாக யூடியூப் சேனலுக்கு தனக்கே உரிய ஸ்டைலில் கூலாக ரவிந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், ‘எனக்கும் மகாலட்சுமிக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்று யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். எனக்கு 38 வயதுதான் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம்’ என்று கூறியுள்ளார்.

    இப்போது மகாலட்சுமியின் வயது என்று கேட்போருக்கு, அவருடைய டேட் ஆஃப் பர்த் இதுதான் : 21 மார்ச் 1990.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி