முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் ரெடின் கிங்ஸ்லேவால் பெரும் நஷ்டம் - தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

நடிகர் ரெடின் கிங்ஸ்லேவால் பெரும் நஷ்டம் - தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

ரெடின் கிங்ஸ்லே

ரெடின் கிங்ஸ்லே

இதன் காரணமாக தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகையை மீட்டுத்தரவேண்டும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சத்தமாக பேசுவது, வித்தியாசமான முக பாவனைகள் என ரசிகர்களைக் கவர்ந்துவருகிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லே. நெல்சன் திலிப்குமாரின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் நகைச்சுவை நடிகராக வேகமாக வளர்ந்துவருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பத்து தல , ஜெயிலர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லே நடித்துவருகிறார்.

இந்தநிலையில் லெக் பீஸ் என்ற படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், லெக்பீஸ் படத்தில் 10 நாள் நடிக்க ரெடின் கிங்ஸ்லே முழு சம்பளம் கொடுத்ததாகவும் ஆனால் அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்ததாகவும் மற்ற நாட்களில் நடிக்க மறுப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகையை மீட்டுத்தரவேண்டும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கம் ரெடின் கிங்ஸ்லேவின் விளக்கத்தை கேட்டுள்ளது.

First published:

Tags: Producer Council