கமல்ஹாசனை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம்

கடைசியாக 2018-ம் ஆண்டு மரகதக்காடு என்ற படத்தை தயாரிப்பாளர் ரகுநந்தன் தயாரித்திருந்தார்.

கமல்ஹாசனை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம்
தயரிப்பாளர் ரகுநந்தன்
  • Share this:
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ரகுநந்தன் காலமானார். அவருக்கு வயது 79.

1975-ம் ஆண்டு ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தை தயாரித்து அந்தப் படத்தில் கமல்ஹாசனை நாயகனாக அறிமுகமாக்கியவர் ரகுநந்தன். மேலும் இந்தப் படத்தில் பெண்டியாலா ஸ்ரீனிவாசன் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடைசியாக 2018-ம் ஆண்டு வெளியான மரகதக்காடு படத்தை தயாரித்திருக்கும் இவர் மொத்தமாக 6 படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வலது காலை வைத்து வா உள்ளிட்ட 5 படங்களை இயக்கியுள்ளார்.


வயது மூப்பின் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை ரகுநந்தன் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள்  நடைபெற்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அடுத்தடுத்த திரைத்துறை பிரபலங்களின் உயிரிழப்பு திரைத்துறையை மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading