ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுதான் ரியல்.. உண்மையான வசூல் விவரத்தை வெளியிட்ட வாரிசு டீம்!

இதுதான் ரியல்.. உண்மையான வசூல் விவரத்தை வெளியிட்ட வாரிசு டீம்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

துணிவு படம் எந்த அளவுக்கு வசூலித்துள்ளது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகிழ்ச்சியில் உள்ள நடிகர் விஜய் படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார். அதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வாரிசு படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, நேற்று நடைபெற்ற சக்சஸ் பார்ட்டியில் விஜய்யிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கேட்டேன், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். எனக்கு இதுபோதும் என உற்சாகமாக பேசினார்.

கடந்த 11 ஆம் தேதி துணிவு படமும் வாரிசு படமும் வெளியான நிலையில் முதல் நாளில் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வாரிசு படமே வசூலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்ப பார்வையாளர்களின் ஆதரவு காரணமாக இருக்கலாம். இதனையடுத்து வாரிசு படம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் வாரிசு படத்தின் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாரிசு படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து ரியல் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் மிக உற்சாகமாக இந்தத் தகவலை பகிர்ந்துவருகின்றனர்.  இதனையடுத்து துணிவு படம் எந்த அளவுக்கு வசூலித்துள்ளது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu