மாநாட்டுக்காக தயாராகும் சிம்பு...! ட்ரெண்டாகும் ஒர்க்அவுட் வீடியோ

"நடிகர் சிம்பு ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள் ட்விட்டரில் சிம்பு ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது"

மாநாட்டுக்காக தயாராகும் சிம்பு...! ட்ரெண்டாகும் ஒர்க்அவுட் வீடியோ
நடிகர் சிம்பு
  • Share this:
நடிகர் சிம்பு ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள் ட்விட்டரில் அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

நடிகர் சிம்பு , இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் நடிப்பில் உருவாகவுள்ள மாநாடு திரைப்படத்தின் அப்டேட்களை மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இசையமைக்க பிரவீன் கே.எல் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.


இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading