ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்தார் வெற்றியை தொடர்ந்து இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

சர்தார் வெற்றியை தொடர்ந்து இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

கார் பரிசளிப்பு

கார் பரிசளிப்பு

படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் லான்சன் டொயோட்டா காரை பரிசளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சர்தார் படம் வெற்றி பெற்றதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு கார் பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார்.

  கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் படமான 'சர்தார்' சில வாரங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி பாக்ஸ் ஆபிஸில் ரூ.85 கோடிக்கு மேல் வசூலித்த சர்தார், 100 கோடியை நோக்கி முன்னேறிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்நிலையில், படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் லான்சன் டொயோட்டா காரை பரிசளித்துள்ளார். இதற்கிடையே தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சென்னையில் சக்சஸ் மீட் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அஷ்வின் குமார் மற்றும் யூகி சேது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Karthi