வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய தயாரிப்பாளர் கைது

மாதிரிப்படம்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை விபசாரத்தில் தள்ளியது விசாரணையில் தெரிய வந்தது.

 • Share this:
  சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

  மும்பையில் உள்ள மிராரோடு, சாந்தி நகர் பகுதியில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரித்தனர். இதில் திரைப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி மற்றும் அவருக்கு உதவியாக வனிதா இங்கலே உள்பட 3 பேர் சேர்ந்து விபசாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனை தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை விபசாரத்தில் தள்ளியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா ஆசையால் இப்படியானவர்களிடம் சிக்கிக் கொண்டு வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: