• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டெடி இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

டெடி இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

ஞானவேல் ராஜா - சக்தி செளந்தர்ராஜன்

ஞானவேல் ராஜா - சக்தி செளந்தர்ராஜன்

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்திருந்த படம் டெடி.

  • Share this:
    டெடி படத்தின் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இயக்குநர் ஞானவேல் ராஜா.

    ஆர்யா நடிப்பில் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியிருந்த படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்திருந்த படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. படத்திற்கு இசை டி.இமான்.

    அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டெடி திரைப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுக்கு, திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

    அந்தப் படங்களை ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், ”டெடி எப்போதும் எனக்கு சிறப்பான படமாக இருக்கும். இதை மேலும் சிறப்பாக்கும் வகையில், இந்த அற்புதமான செயலை செய்த ஞானவேல் ராஜாவுக்கு நன்றி! உங்கள் எண்ணங்களும் செயல்களும் எப்போதும் பெரியதாகவும், தாராளமாகவும் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தார்.



    இதற்கு பதிலளித்த ஞானவேல் ராஜா, ”உங்களுடன் பணியாற்றுவதில் எப்போதும் மகிழ்ச்சி. ஒரு இயக்குநராக தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நபரான நீங்கள் எளிமையான சிறந்த மனிதர். உங்கள் பயணத்தின் சிறிய பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: