Thalapathy Vijay: ’உங்கள் பிறந்தநாள் திரையுலகின் திருநாள்’ விஜய்யை புகழ்ந்த பிரபலம்!

தளபதி விஜய்

பொதுவாக எல்லாருக்கும் ஒவ்வொரு வயதாகும் போதும் முதிர்ச்சி தெறியும். மாறாக, விஜய்க்கோ ஒவ்வொரு பிறந்தநாளிலும் வயது குறைந்து, இளமை கூடுகிறது.

  • Share this:
    ’உங்கள் பிறந்தநாள் திரையுலகின் திருநாள்’ எனக் குறிப்பிட்டு, விஜய் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

    வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

    நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தெறிக்க விடுகிறார். பொதுவாக எல்லாருக்கும் ஒவ்வொரு வயதாகும் போதும் முதிர்ச்சி தெறியும். மாறாக, விஜய்க்கோ ஒவ்வொரு பிறந்தநாளிலும் வயது குறைந்து, இளமை கூடுகிறது. இவரின் வயதிலிருக்கும் மற்றவர்களைப் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். அந்தளவுக்கு மோஸ்ட் சார்மிங் ஆக்டராக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலைக் குடும்பத்திலிருந்து வந்தாலும் பெற்றோர் எனும் மர நிழலில் நாட்களைக் கடத்தாமல், தனது கடின உழைப்பாலும், தோல்விகள் பலவற்றைக் கண்டும், கைவிடாத தன்னம்பிக்கையாலும் இன்று மாபெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார் விஜய்.



    அவரது பிறந்தநாளைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் என விஜய் ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். மறுபுறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ”உங்கள் பிறந்தநாள், திரையுலகின் திருநாள், உலகத் தமிழருக்கு பெருநாள், வாழ்க வளமுடன், வாழ்த்தும் வி கிரியேஷன்ஸ்” எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ’ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்’ எனக் குறிப்பிட்டு அதில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: