நடிகர் சிம்பு இரண்டாவது இன்னிங்ஸில் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதற்கேற்ப அவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது பத்து தல படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கண்ணும் கண்ணும கொள்ளைடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகவிருக்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெளியானபோது அந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டியிருக்கிறார். அப்போது தனக்கு ஏற்ப ஒரு கதையிருந்தால் கூறுமாறும் தெரிவித்திருக்கிறார். அடிப்படையில் தேசிங் பெரியசாமி ஒரு ரஜினிகாந்த் ரசிகர் என்பதால் உற்சாகமாக ஒன் லைனை ரஜினிகாந்த்திடம் தேசிங் பெரியசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த்துடன் அவர் ஒரு படத்தில் இணைவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
#SilambarasanTR - #DesingnPeriyasamy project was initially supposed to be done with Superstar #Rajinikanth but later on it movie to STR 💥
Career best & biggest movie loading for STR👊🔥pic.twitter.com/wYiZkn3cIy
— AmuthaBharathi (@CinemaWithAB) March 8, 2023
ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும் தேசிங் பெரியசாமியின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு சுவாரசியத் தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில், தேசிங் பெரியசாமியிடம் ஒரு கதை கேட்டேன். மிக சிறப்பான கதை. அந்த கதைக்கு அத்தனை கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு ஹீரோவுக்கு சப்போர்டிங் கேரக்டருக்கு பேசுனோம். அவர் தன்னுடயை அப்பாகிட்ட சொல்லி அந்தப் படத்துல நடித்தே ஆக வேண்டும் என்றார்.
தாணு குறிப்பிட்ட தேசிங் பெரியசாமியின் கதை தான் முன்பு ரஜினிக்கு சொல்லப்பட்டதாகவும் அந்தக் கதையில் தான் தற்போது சிம்பு நடிப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth, Silambarasan