’தமிழகம் நிமிர்ந்திட வாழ்த்துகிறேன்’ - முதல்வரை பாராட்டிய கலைப்புலி எஸ் தாணு 10 லட்சம் கொரோனா நிதி!

கலைப்புலி எஸ் தாணு

"பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவுகளும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.”

  • Share this:
    தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் தாணு பத்து லட்ச ரூபாய் அளித்துள்ளார். அத்துடன் முதலமைச்சரின் பணியைப் பாராட்டி கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.

    கொரோனா முதல் அலையில் தமிழகத்தில் ஒருநாள் அதிகப்பட்ச தொற்று எட்டாயிரத்துக்குள் இருந்தது. இரண்டாம் அலையில் தொற்றின் தீவிரம் பல மடங்கு உயர்ந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தின் ஒருநாள் தொற்று 26,465 ஆக இருந்தது. மாபெரும் பேரிடர் காலத்தில் பதவிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் வேகமான தொலைநோக்கு நிர்வாகத்தால் மூன்று வாரங்களுக்குள் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்ததுடன் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அரசின் செயல்பாட்டை பாராட்டிய பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இப்போதுவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 300 கோடிக்கு மேல் நன்கொடை வந்துள்ளது.

    தயாரிப்பாளர் தாணு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் பத்து லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளார். அத்துடன் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    "பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவுகளும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

    தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும் சந்ததிகளையும் தேக பலம் மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித்தரும். உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: