Home /News /entertainment /

வரும் 29-ம் தேதி வெளியாகிறது நானே வருவேன் படம்!

வரும் 29-ம் தேதி வெளியாகிறது நானே வருவேன் படம்!

நானே வருவேன் தனுஷ்

நானே வருவேன் தனுஷ்

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார்.

இதை செப்டம்பர் 30ம் தேதி வெளியிட கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டு இருந்தார்.  ஆனால் அதே தேதியில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதலாம் பாகமும் வெளியாகிறது.



இதனால் ஒருநாள் முன்கூட்டியே வெளியிடலாமா என்ற ஆலோசனையில் கலைபுலி எஸ்.தாணு இருந்தார். இதன் காரணமாக வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வாமல் அறிவிக்காமல் இருந்தது.



அதே சமயம் செப்டம்பர் 30 அல்லது 29 என்ற குழப்பமும் தொடர்ந்து நீடித்து வந்தது. அதன் காரணமாக டீசர் வெளியீட்டிலும் படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் தவிர்க்கப்பட்டது.

Also read... நாளை திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!

இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கிறார்.  ஒருநாள் முன்கூட்டியே வெளியிடுவதால் அதிகப்படியான திரையரங்குகளில் நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட முடியும்.  இதன் காரணமாக முதல் நாள் வசூல் அதிகமாகும் என தயாரிப்பாளர் தாணு கணக்கிட்டு உள்ளார்.

ஒருவேளை படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தால் அடுத்த 3 நாட்கள் படத்தின் வசூலை பாதிக்கும் எனவும் சிலர் கூறியிருக்கின்றனர்.  அது குறித்து ஆழ்ந்து யோசித்த நிலையிலும்,  இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி