• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் தாணு...!

எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் தாணு...!

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

என்டிஆர், ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி, ஜெயலலிதா என எந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறும் வெற்றி பெறவில்லை. மாறாக பெரும் தோல்விகளையே சந்தித்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி வெளியான நிலையில், எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைநட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்தியாவில் உண்மையுடனும், நேர்மையுடன் எடுக்க இயலாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் காரணமாக என்டிஆர், ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி, ஜெயலலிதா என எந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறும் வெற்றி பெறவில்லை. மாறாக பெரும் தோல்விகளையே சந்தித்தன. ஆனாலும், வாழ்க்கை வரலாறு மீதான மோகம் குறையவில்லை. வி கிரியேஷன்ஸ் தாணு எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தை சத்யா, பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். பூபதிராஜா திரைக்கதை எழுதுகிறார். இந்தப் படத்தில் எம்ஜிஆர் கட்சி தொடங்கியது, முதலமைச்சரானது, சத்துணவு திட்டம் கொண்டு வந்தது கண்டிப்பாக இடம்பெறும்.

Also read... தொடங்கியது த்ரிஷ்யம் கூட்டணியின் புதிய படம்...!

எம்ஜிஆர் குறித்த சர்ச்சையான கருத்துகள் இடம்பெற வாய்ப்பில்லை. தலைவி போல் இன்னொரு தகவல் பிழையாக இந்தப் படமும் இல்லாமல் இருந்தால் நல்லது. குறிப்பாக அரவிந்த்சாமியை எம்ஜிஆராக நடிக்க வைக்காமலிருக்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: