எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம் ரஜினிக்கும்! அரசியல் வருகை குறித்து கலைஞானம் நம்பிக்கை

ரஜினியை நாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர்.

எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம் ரஜினிக்கும்! அரசியல் வருகை குறித்து கலைஞானம் நம்பிக்கை
ரஜினிகாந்துடன் கலைஞானம்
  • News18
  • Last Updated: October 7, 2019, 6:13 PM IST
  • Share this:
ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது என்று தயாரிப்பாளர் கலைஞானம் நெகிழ்ந்துள்ளார்.

திரைத்துறையில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்தை, பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கலைஞானம்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாளையொட்டியும் தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் பாரதிராஜா தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவக்குமார், கதாசிரியர் கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சிவகுமாரின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கலைஞானத்துக்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக கூறினார். மேலும் கலைஞானத்துக்கு கதை சக்கரவர்த்தி கலைஞானம் என்ற பட்டத்தையும் ரஜினிகாந்த் அளித்தார்.

ரஜினிகாந்த்
இந்நிலையில் தற்போது தான் அறிவித்தபடி, சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வீட்டை கலைஞானத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் கலைஞானம், “நான் ரஜினிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். அது படி செய்து விட்டார். கடைசி காலத்தில் வீடு வாங்கி கொடுத்ததை கூட சிலர் கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை.

ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் போது அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. ரஜினியை நாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர். ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது.

ரஜினி அரசியல்வாதி ஆவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம். 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார்.
அவர் மக்களை ஏமாற்ற கூடாது. ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பெண் தொழிலதிபர் மது சரண்

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading