ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெண்டில்மேன் 2 படத்தில் தெலுங்கு ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்தும் கே.டி.குஞ்சுமோன்

ஜெண்டில்மேன் 2 படத்தில் தெலுங்கு ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்தும் கே.டி.குஞ்சுமோன்

சேதன், கே.டி.குஞ்சுமோன்

சேதன், கே.டி.குஞ்சுமோன்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் 1993-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் ஜெண்டில்மேன். அந்தப் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜெண்டில்மேன்-2 படத்தில் தெலுங்கு ஹீரோ சேதன் என்பவரை தமிழில் அறிமுக நாயகனாக நடிக்க வைக்கும் கே.டி.குஞ்சுமோன்.

    ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் 1993-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் ஜெண்டில்மேன். அந்தப் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

    ஜெண்டில்மேன் வெளியாகி 30 வருடங்கள் ஆகும் நிலையில், ஜெண்டில்மேன்-2 என்ற படத்தை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் எடுக்கிறார்.

    இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. அதேபோல் நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று ஏற்கவே அறிவித்திருந்தனர்.

    ஆனால் படத்தின் நாயகன் யார் என்பதை வெளியிடவில்லை. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் சேதன் சீனுவை ஜெண்டில்மேன்-2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்துகின்றனர்.

    Also read... கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா... அழகில் ஜொலிக்கும் ஹூமா குரேசி!

    அதேபோல் ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனின் இணை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படம் பெரும்பாலும் புதுமுக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இளைஞர்களின் துணையுடன் உருவாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment