நடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

நடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
யோகி பாபு
  • Share this:
3 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்திற்கு டப்பிங் பேசாமல் யோகி பாபு இழுத்தடிப்பதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

திருஞானம் இயக்கத்தில் 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன் தயாரிப்பில் த்ரிஷா, நந்தா, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. வரும் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே.ராஜன், ”ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இயக்குநர் தான் முழுக்காரணம். நடிகர்கள் ஆரம்பத்திலிருப்பது போலவே இறுதிவரை இருக்க வேண்டும். ஒரு மரம், நட்டவர்க்கும், நாட்டு  மக்களுக்கும் பயன் தருகிறது. மனிதன் மட்டுமே யாருக்கும் உதவுவதில்லை. சினிமா உலகில் தன்னை வளர்த்தவர்களை மறந்து விடுகிறார்கள்


கவிஞர்களே தப்பான வார்த்தையை தயவுசெய்து பாடலில் சேர்க்காதீர்கள். தமிழ்ப் பண்பாட்டை கெடுக்காதீர்கள். பாக்யராஜைப் பின்பற்றுங்கள். பாக்யராஜின் படங்களில் கவர்ச்சி இருக்கும் ஆனால், வன்மம் இருக்காது. முருங்கைக்காய் சற்று அதிக பலம் கொடுக்கிறது, அதைக் காட்டியிருப்பார் அதில் என்ன இருக்கிறது. இன்றும் சிரிக்கிறார்கள்.

தயாரிப்பாளருக்கு உதவிய நடிகர் சந்தானத்திற்கு நன்றி. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கும் யோகிபாபு, விரைவில் டப்பிங் பேசித்தர வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க: புரமோஷனுக்கு ‘நோ’ சொல்லி சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்