டாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை

இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

டாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை
தயாரிப்பாளர் கே.ராஜன்
  • Share this:
தமிழக அரசின் காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிடுங்கள் என்று தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இத்திரைப்படத்தை ராஜன் மலைச்சாமி இயக்கி நடித்துள்ளார். அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி உள்ளிட்ட பல புதுமுகங்கள் இத்திரைப்படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர். அர்ஜுன் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே.ராஜன், “தமிழக அரசின் காலில் விழுந்து கேட்கிறேன். தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்காக வேறு வழியை பாருங்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்.


மறைந்த முதல்வர் காமராஜர் டாஸ்மாக் வருமானத்தை நம்பியா அரசாங்கம் நடத்தினார்? ஏராளமான பள்ளிக்கூடங்களை திறந்து கல்வியைக் கொடுத்த காமராஜர் இப்படியா வருவாய் ஈட்டினார். இன்று 30% பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே டாஸ்மாக் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க : நடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்