முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் - பகாசூரனுக்காக கிடைத்த கிஃப்ட் - இயக்குநர் மோகன்.ஜி நெகிழ்ச்சி

ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் - பகாசூரனுக்காக கிடைத்த கிஃப்ட் - இயக்குநர் மோகன்.ஜி நெகிழ்ச்சி

மோகன் ஜிக்கு வாட்ச் பரிசளிக்கும் தயாரிப்பாளர் கௌதம்

மோகன் ஜிக்கு வாட்ச் பரிசளிக்கும் தயாரிப்பாளர் கௌதம்

இவர்களுடன் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் ரிஷி ரிச்சர்ட்டும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்றுவருகிறது.

இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்தப் படத்தின் காட்சி அமைப்புகளும் வசனங்களும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன.

இந்த நிலையில் இயக்குநர் மோகன். ஜிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை தயாரிப்பாளர் கௌதம் பரிசாக வழங்கினார். படத்துக்கு கிடைத்துவரும் வரவேற்பை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ஜிடிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன்ஜிக்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இவர்களுடன் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் ரிஷி ரிச்சர்ட்டும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

First published: