₹10 கோடி பணத்தைத் திருப்பித் தரவில்லை - ஞானவேல்ராஜாவின் புகாருக்கு கமல் தரப்பு விளக்கம்

Web Desk | news18
Updated: September 26, 2019, 11:48 AM IST
₹10 கோடி பணத்தைத் திருப்பித் தரவில்லை - ஞானவேல்ராஜாவின் புகாருக்கு கமல் தரப்பு விளக்கம்
கமல்ஹாசன்
Web Desk | news18
Updated: September 26, 2019, 11:48 AM IST
தன்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை கமல்ஹாசன் திருப்பித் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார். ஆனால் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கமல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஞானவேல் ராஜா அளித்துள்ள புகாரில், கடந்த 2015 - ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்நிலையில், ஞானவேல் ராஜா புகாருக்கு விளக்கமளித்துள்ள கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க: சென்னை வீதிகளில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன் - நடிகர் சூரி உருக்கம்

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...