மீண்டும் இணையும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி - உறுதிசெய்த தயாரிப்பாளர்

தனுஷ் வெற்றி மாறன்

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதி செய்துள்ளார்.

  • Share this:
    தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துப் படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அவர்களது கூட்டணியில் வடசென்னை இரண்டாம் பாகம் வெளிவருமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையில், சூரியை வைத்து ஒருபடமும், சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

    சூர்யாவும், வெற்றிமாறனும் முதன்முறையாக இணைவதால் அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தநிலையில், நேற்று வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்ட பல தரப்பினரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்துவந்தனர்.



    இந்தநிலையில், நேற்று ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர் எல்ரெட் குமார், வெற்றிமாறனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர் உங்கள் தயாரிப்பில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆமாம் என்று பதிலளித்துள்ளார் எல்ரெட் குமார்.
    Published by:Karthick S
    First published: