ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு இசை வெளியீடு: தயாரிப்பாளர் தில் ராஜு என்ட்ரி ; 'நம்பர் 1... நம்பர் 1...' கூச்சலிட்ட ரசிகர்கள்

விஜய்யின் வாரிசு இசை வெளியீடு: தயாரிப்பாளர் தில் ராஜு என்ட்ரி ; 'நம்பர் 1... நம்பர் 1...' கூச்சலிட்ட ரசிகர்கள்

தில் ராஜு

தில் ராஜு

Vijay Varisu : வாரிசு பட இசை வெளியீட்டு விழா அரங்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு நுழைந்தபோது நம்பர் 1, நம்பர் 1 என ரசிகர்கள் கூச்சலிட்டிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. வாரிசுடன் நடிகர் அஜித்துடன் துணிவு படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழகத்தில் 4 ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை மட்டும் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்க | விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா: பரபரப்பாக தயாராகும் மேடை... கியூட்டாக வந்த ராஷ்மிகா... பட்டைய கிளப்பும் தமன்

துணிவு படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாகவும், விஜய் தான் தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் எனவும் அஜித் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் எனவும் இதன காரணமாக வாரிசு படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இது சர்ச்சையானது.

இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா அரங்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு நுழைந்தபோது நம்பர் 1, நம்பர் 1 என ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிட்டனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu, Vijay