ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"தெலுங்கு ஹீரோக்கள் படங்களைதான் முதலில் பார்க்கணும்"- வாரிசு தள்ளிவைப்பு பற்றி தில் ராஜு பேச்சு!

"தெலுங்கு ஹீரோக்கள் படங்களைதான் முதலில் பார்க்கணும்"- வாரிசு தள்ளிவைப்பு பற்றி தில் ராஜு பேச்சு!

தயாரிப்பாளர் தில் ராஜு - நடிகர் விஜய்

தயாரிப்பாளர் தில் ராஜு - நடிகர் விஜய்

வாரிசு படத்துக்கு போட்டியாக நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகும் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அங்கு படமாக்கப்பட்டுவந்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்தது சர்ச்சையானது. இதுகுறித்து விளக்கமளித்த தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு தமிழ் படம் என்றார்.

தமிழில் வாரிசு படத்துக்கு போட்டியாக நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகும் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் வெளியாகிறது. மேலும் துணிவு படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு அளவில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் தமிழில் 11 ஆம் தேதியே வெளியாகும் வாரிசு படம் தெலுங்கில் 14 ஆம் தேதி தான் வெளியாகிறதாம். தெலுங்கில் வாரிசு படத்தின் வெளியீடு படம் தள்ளிவைக்கப்பட்டதற்கு காரணம், அங்கு பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம் 12 ஆம் தேதியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் 13 ஆம் தேதியும் வெளியாவதே காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வாரிசுடு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தில் ராஜு, ரசிகர்கள் தெலுங்கு ஹீரோக்கள் படங்களான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி படங்களைதான் முதலில் பார்க்க வேண்டும். அதனால்தான் வாரிசுடு படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது என்றுதெரிவித்துள்ளது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu