முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'மாவீரன்' பட இயக்குநரை கட்டாயப்படுத்தினாரா சிவகார்த்திகேயன்? என்ன நடந்தது? தயாரிப்பு தரப்பு விளக்கம்!

'மாவீரன்' பட இயக்குநரை கட்டாயப்படுத்தினாரா சிவகார்த்திகேயன்? என்ன நடந்தது? தயாரிப்பு தரப்பு விளக்கம்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இந்த படம் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு இதுபோன்ற வேலைகளை செய்துவருகிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களைக் கவரத் தவறியதால் தோல்வியைத் தழுவியது. சிவகார்த்திகேயனின் இமேஜுக்கு ஏற்ற கதை இல்லாததே இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் படத்தின் கதையை சிவகார்த்திகேயன் மாற்ற சொன்னதாகவும் தற்போது அதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல் பரவியது. பிரின்ஸ் படத்தின் தோல்வியின் காரணமாகவே சிவகார்த்திகேயன் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

மாவீரன் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் இந்தத் தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாவது, மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு புதிய கதை தயார் செய்யப்பட்டு வருவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இந்த படம் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு இதுபோன்ற வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Sivakarthikeyan