ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’அஜித் என்னுடைய சகோதரன் போல..’ மனம் திறந்த துணிவு தயாரிப்பாளர் போனிகபூர்

’அஜித் என்னுடைய சகோதரன் போல..’ மனம் திறந்த துணிவு தயாரிப்பாளர் போனிகபூர்

போனி கபூர், அஜித்

போனி கபூர், அஜித்

நடிகர் அஜித் என்னுடைய இளைய சகோதரர் போலவே கருதுகிறேன் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் உடன் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.  சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனியார் செய்திக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகர் அஜித் குறித்தும், இயக்குனர் H. வினோத் குறித்தும், துணிவு திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது தவிர விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படமும் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

முன்பு எல்லாம் தமிழ் சினிமாதான் ஒழுக்கத்தில் சிறந்ததாக இருந்தது. தற்போது பாலிவுட் சினிமாவும் அதை நோக்கி வருகிறது. இதற்கு காரணம் கார்பரேட் நிறுவனங்கள் சினிமா துறைக்குள் வந்ததுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலிவுட்டில் பெரிய நடிகர்கள் நடிக்கும் போது அதற்கு அப்டேட்கள் கேட்டப்படுவது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அப்டேட் கேட்பது தயாரிப்பாளருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த போனி கபூர், நிச்சயமாக அது நெருக்கடி இல்லை என்று பதிலளித்த அவர், அது ஒரு தயாரிப்பாளரின் பாக்கியம் என்றும் தெரிவித்தார்.

மேலும், துணிவு படம் ரிலீஸ் ஆகும் அதே 11 ஆம் தேதியே விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போனி கபூர் பாலிவுட்டிலும் இது சாதாரணமாக நடைபெறும் ஒன்று. பண்டிகை நாட்களில் மூன்று நான்கு பெரிய படங்கள் வெளியாவது வழக்கம் தான். கடந்த தீபாவளிக்கு பாலிவுட்டில் மூன்று பெரிய படங்கள் வெளியாகின, ரம்ஜானிற்கு இரண்டு பெரிய படங்கள் வெளியாகின ஆதலால் பண்டிகைகளில் பெரிய படங்கள் மோதிக்கொள்வது சாதாரண விஷயம் என்று தெரிவித்தார்.

மேலும், அஜித் உடனான உறவு குறித்து பேசிய போனி கபூர், "நான் அவரை என்னுடைய இளைய சகோதரர் போலவே கருதுகிறேன். சில நேரங்களில் அவரை நான் சின்னத்தம்பி என்று தான் அழைப்பேன்" என குறிப்பிட்டார். நடிகர் அஜித்தை சின்னத்தம்பி என அழைப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ள விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also read... கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜுக்கு வெற்றியை தந்த 1994 பொங்கல் படங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Thunivu