புதுவை முதல்வர் ரங்கசாமியை அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் திரைப்படங்கள் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் பாக்யராஜ், உள்ளிட்ட பிரபலங்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா எடுப்பதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுச்சேரியில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு தயாராக உள்ள பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் புதுச்சேரி வந்திருந்தார். அவர் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது துணை சபாநாயகர் ராஜவேலு, அவரது துணைவியார் மாலதி ராஜவேலு, ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க - 'அயலான்' இயக்குனர் ரவிகுமாருடன் இணையும் சூர்யா... சைன்ஸ் ஜேனரில் பிரமாண்ட படம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போனி கபூர், புதுச்சேரி பிரெஞ்சு கலாச்சாரத்துடன் உள்ள மாநிலம் என்பதால் மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி புதுச்சேரிக்கு பாலிவுட் நடிகர்கள் விரும்பி வருவவேன். தற்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினேன். பெரிய பட்ஜெட் அளவிலான திரைப்படங்களை புதுச்சேரியில் எடுக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கு தேவையான உட் கட்டமைப்புகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க - 'வட இந்தியா - தென்னிந்தியா என சினிமாவை பிரிப்பதை விரும்பவில்லை' - இளம் நடிகர் டைகர் ஷெரோப் கருத்து
போனி கபூர் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தாலும், அஜித்தின் வலிமை படம்தான் அவரை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு சென்றது. படத்தின் தயாரிப்பாளரான அவரிடம், ரசிகர்கள் அப்டேட் கேட்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அவருக்கு இன்பத் தொல்லை கொடுத்தனர்.
தற்போது போனி கபூர் கோலிவுட்டில் உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி, அஜித்தின் அடுத்த படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.