பிளாக்பஸ்டர் தமிழ் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய போனி கபூர்

news18
Updated: September 21, 2019, 1:39 PM IST
பிளாக்பஸ்டர் தமிழ் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய போனி கபூர்
news18
Updated: September 21, 2019, 1:39 PM IST
கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி. 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ள கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.

இந்நிலையில் கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். இந்தி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தியில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளார்.


இதுகுறித்து போனி கபூர், ‘கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா மொழிகளிலும் படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்

Also watch

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...