'தளபதி 63' போஸ்டர் ரெடி - அதிரடியாக சொன்ன தயாரிப்பாளர்

தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சவுந்தர்ராஜா, தளபதி 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்

'தளபதி 63' போஸ்டர் ரெடி - அதிரடியாக சொன்ன தயாரிப்பாளர்
விஜய்
  • News18
  • Last Updated: March 3, 2019, 6:57 AM IST
  • Share this:
தளபதி 63 படத்தின் போஸ்டர் விரைவில் ரெடியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்-அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சவுந்தர்ராஜா, தளபதி 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.




இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, ‘எனக்கு மிகவும் பிடித்த விஜய் பட போஸ்டர்களில் ஒன்று இது. மிகவும் திறமை வாய்ந்த கோபி பிரசன்னா அவர்களால் உருவாக்கப்பட்டது. இது என்னுடைய அலுவலகத்தில் தற்போது இருக்கிறது. எங்களுடைய தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 63 படத்தின் போஸ்டர் விரைவில் என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.



Also watch

First published: March 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்