‘தங்க மனசு’... நம்ம தளபதி விஜய் தான் பெஸ்ட்... பிகில் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய்

news18
Updated: August 14, 2019, 8:42 AM IST
‘தங்க மனசு’... நம்ம தளபதி விஜய் தான் பெஸ்ட்... பிகில் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
விஜய்
news18
Updated: August 14, 2019, 8:42 AM IST
பிகில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 95% முடிந்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.



இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. 95% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிக்காததற்கு மன்னியுங்கள். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்ய முயற்சி செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்


மேலும் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய். அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார்.



Also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...