தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனிக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி

நிரஞ்சனியும், தேசிங்கு பெரியசாமியும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

 • Share this:
  புதிதாக திருமணம் செய்துக் கொண்ட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நடிகை நிரஞ்சனி தம்பதிக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

  கடந்த ஆண்டு துல்கர் சல்மான், ரிது வர்மா, இயக்குனர் கெளதம் மேனன், ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி ஆகியோர் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் வெளியானது. இதனை அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.  இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்த நிரஞ்சனியும், தேசிங்கு பெரியசாமியும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான நிரஞ்சனி, அடிப்படையில் ஒரு ஆடை வடிவமைப்பாளர்.'வாயை மூடி பேசவும்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'பென்சில்', 'கதகளி' மற்றும் 'கபாலி' உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

  திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி தம்பதிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஒரு காரை பரிசளித்துள்ளார். அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த தேசிங்கு பெரியசாமி, தனது தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: