ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்'' - புதிதாக பிறந்த குழந்தையின் உடல்நிலை குறித்து ஆர்.கே.சுரேஷ் உருக்கம்

''எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்'' - புதிதாக பிறந்த குழந்தையின் உடல்நிலை குறித்து ஆர்.கே.சுரேஷ் உருக்கம்

ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ்

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆர்.கே.சுரேஷின் மனைவி மதுவிற்கு கடந்த டிசம்பரில் வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மிஷ்கின், நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டனியின் 'சலீம்', விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' போன்ற பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ச்சியாக தமிழ் படங்களை விநியோகித்து வருகிறார். இதற்கிடையே இயக்குநர் பாலாவின் தாரதப்பட்டை படத்தில் வில்லனாக மிரட்டினார். தொடர்ந்து மருது, இப்படை வெல்லும் என தொடர்ச்சியாக வில்லன் வேடத்தில் நடித்துவந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த படங்களான பில்லா பாண்டி, விசித்திரன் ஆகியவை போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் மற்றும் அதர்வாவின் பட்டத்து அரசன் என கடந்த வருடம் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த இரண்டு படங்கள் வெளியாகியிருந்தது.

ஆர்.கே.சுரேஷ் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கும் ஸ்ரேயா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆர்.கே.சுரேஷின் மனைவி மதுவிற்கு கடந்த டிசம்பரில் வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மிஷ்கின், நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சு திணறல் பிரச்னை இருந்தது. கடவுளின் அருளால் தற்போது நன்றாக இருக்கிறான். எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: R.K.Suresh