அஜித்துக்கு ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தைத் தயாரித்த ஸ்ரீராம் தயாரிப்பில் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!
ஆலயம் ஸ்ரீராம்
  • News18
  • Last Updated: September 4, 2019, 5:41 PM IST
  • Share this:
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60.

இயக்குநர் மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர் ஸ்ரீராம். மணிரத்னத்துடன் இணைந்து ஆலயம் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டவர். இந்நிறுவனத்தின் முதல்படமாக விஜயகாந்தின் சத்ரியன் படம் அமைந்தது. அஜித் நடித்த ஆசை படத்தையும் தயாரித்தது இந்நிறுவனம் தான்.

தொடர்ந்து, பாம்பே, திருடா திருடா, இருவர் ஆகிய படங்களையும் ஆலயம் ஸ்ரீராம் தயாரித்தார். கடைசியாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தைத் தயாரித்த ஸ்ரீராம் தயாரிப்பில் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சென்னையில் தனது மனைவி நளினி ஸ்ரீராம் மற்றும் மகன் நிகில் உடன் வசித்து வந்த ஸ்ரீராம் இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இறுதிச்சடங்குகள் நாளை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீராமின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க: நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஒரு கோடி ரூபாய் பறித்த பெண்

Loading...

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...