ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வி.கே.ராமசாமி தயாரிப்பில் வசனநடை பாடலைக் கொண்ட செல்வம்

வி.கே.ராமசாமி தயாரிப்பில் வசனநடை பாடலைக் கொண்ட செல்வம்

செல்வம்

செல்வம்

சம்பாதிப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் இல்லாததால் வி.கே.ராமசாமியை, பொழைக்கத் தெரியாதவன்யா நீ என்பாராம் சிவாஜி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வி.கே.ராமசாமி 7 வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 15 வயதில் தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற வேடத்தில் நடித்தார். நாடகத்தைப் பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு நாடகமும், வி.கே.ராமசாமியின் நடிப்பும் பிடித்துப் போனது. ஆறு வருடங்கள் கழித்து படத்தயாரிப்பில் இறங்கிய ஏவி மெய்யப்ப செட்டியார் முதல் படமாக, தியாக உள்ளம் நாடகத்தின் உரிமையை வாங்கி நாம் இருவர் என்ற பெயரில் சினிமாவாக்கினார்.

நாம் இருவர் படத்தில் வி.கே.ராமசாமிக்கு நாடகத்தில் நடித்த அதே பேங்கர் சண்முகம் பிள்ளை வேடம் தரப்பட்டது. சினிமாவில் கதாபாத்திரத்துக்கு இன்னும் அதிக வயசு. அதாவது 60 வயசு. வளர்ந்த கடா மாதிரியான பையனின் தந்தை. இந்த 60 வயது கிழவர் வேடத்தை வி.கே.ராமசாமி செய்து, திரையில் அறிமுகமான போது, அவரது உண்மையான வயது 21. அதன் பிறகு வயதான வேடங்களே தொடர்ச்சியாக கிடைத்தன.

1982 இல் அளித்த பேட்டியொன்றில், சம்பாதித்த அனைத்தையும் யார் யாரோ கொண்டு சென்றதாக வி.கே.ராமசாமி கூறியிருந்தார். குடி, ரேஸ் என சில கெட்டப் பழக்கங்களும் அவரிடம் இருந்தன. தயாரிப்பு, இயக்கம் என்று சில பரிசோதனைகளும் மேற்கொண்டார். திரையுலகில் அவரிடம் நட்போடு இருந்தவர் சிவாஜி. சம்பாதிப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் இல்லாததால் வி.கே.ராமசாமியை, பொழைக்கத் தெரியாதவன்யா நீ என்பாராம் சிவாஜி.

நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!

இதனாலோ என்னவோ, 1966 இல் வி.கே.ராமசாமி கேட்டதும் சிவாஜி கால்ஷீட் தந்தார். அந்தப் படம்தான் செல்வம். செல்வமே தங்காத வி.கே.ராமசாமி தயாரித்தப் படத்தின் பெயர் செல்வம்.

படத்தில் செல்வம் என்பது பொருளல்ல, நாயகன் சிவாஜியின் பெயர். அம்மாவின் ஜோதிட நம்பிக்கை மகனுக்கும் தொற்றி, இறந்துவிடுவோமோ என்று கவலைப்படும் கதாபாத்திரம். ஜோடி கே.ஆர்.விஜயா.

மருத்துவராக எஸ்.வி.ராங்கா ராவ். கே.வி.மகாதேவன் இசையில் ஆலங்குடி சோமுவும், வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர். 'அவளா சொன்னாள்... இருக்காது... அப்படி எதுவும் நடக்காது... நடக்கவும் கூடாது... நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...' என்ற வசனத்தைப் போல் வரும் பாடல் ஒன்றுதான் உருப்படியாக அமைந்தது.

திரையரங்கில் வெளியான யசோதா... ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சமந்தா

சிவாஜி நகைச்சுவை கலந்து இலகுவாக நடித்த படம். மிகப்பெரிய வெற்றி இல்லையென்றாலும் நஷ்டமில்லை.

செல்வம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து 1969 இல் வி.கே.ராமசாமியின் திருமணம் நடந்தது.

மனைவியின் வரவால் குடி, ரேஸ் போன்ற கெட்டப் பழக்கங்கள் அவரைவிட்டுப் போயின. ஆனாலும், செல்வம் அவரிடம் பெரிதாக தங்கவில்லை.  1982 பேட்டியில், நிறைய நடிச்சும் இப்போதும் கடன்காரனாகத்தான் இருக்கேன் என்றார்.1966 நவம்பர் 11 வெளியான செல்வம் நேற்று 56 வருடங்களை நிறைவு செய்தது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Sivaji ganesan, Kollywood, Tamil Cinema