விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு தெலுங்கு மாநிலங்களில் காத்திருக்கும் சிக்கல்

பீஸ்ட்

நேரடி தெலுங்குப் படங்களுக்கே திரையரங்குகள் கிடைப்பதில் இழுபறி நிலவும் நிலையில் பீஸ்ட் படத்துக்கு எதிர்பார்க்கிற திரையரங்குகள் கிடைப்பது கடினம்.

 • Share this:
  விஜய்யின் பீஸ்ட் படத்தை 2022 பொங்கலை முன்னிட்டு வெளியிட தீர்மானித்துள்ளனர். தயாரிப்பு தரப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனினும், பொங்கலுக்கு படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

  தமிழகத்தில் விஜய்தான் கிங். அவருடன் வேறு நடிகர்களின் படங்கள் போட்டியிட்டு வெல்வது கடினம். ஆனால், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் நிலைமை வேறு. விஜய் படங்களின் முக்கிய சந்தையாக அவ்விரு மாநிலங்கள் இருப்பினும், அங்குள்ள ஸ்டார் நடிகர்களின் படங்களுடன் போட்டியிடுவது கடினம். திரையரங்குகளும் கிடைக்காது. அப்படியொரு சிக்கலை பீஸ்ட் எதிர்கொண்டிருக்கிறது.

  நமக்கு பொங்கல் என்றால், தெலுங்கு பேசும் மக்களுக்கு சங்கராந்தி. சங்கராந்தியை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் அங்கு வெளியாகும். பவன் கல்யாண், ராணா இணைந்து நடிக்கும் அய்யப்பனும் கோஷியும் மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக் 2022 ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகிறது. மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. பிரபாஸின் பான் - இந்தியா திரைப்படமான ராதே ஷ்யாம் அதற்கு அடுத்த நாள் 14 ஆம் தேதி வெளியாகிறது. இவற்றுடன் சிரஞ்சீவியின் ஆச்சார்யா, வெங்கடேஷின் எஃப் 3 ஃபன் அண்ட் ப்ரெஷ்ட்ரேஷன் ஆகிய படங்களும் சங்கராந்தியை குறி வைத்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நேரடி தெலுங்குப் படங்களுக்கே திரையரங்குகள் கிடைப்பதில் இழுபறி நிலவும் நிலையில் பீஸ்ட் படத்துக்கு எதிர்பார்க்கிற திரையரங்குகள் கிடைப்பது கடினம். மேலும், டிசம்பர் இறுதியில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்தப் படம் பல திரையரங்குகளில் சங்கராந்தியை கடந்து ஓட வாய்ப்புள்ளது. அதனால், பீஸ்ட் தமிழகத்தில் வெளியாகி ஓரிரு வாரங்கள் கழித்து ஆந்திரா, தெலுங்கானாவில் திரையிடப்படலாம். மீதமிருக்கும் ஒரு மாநிலம் கேரளா. இங்கு விஜய்யின் பீஸ்ட், பிரபாஸின் ராதே ஷ்யாம், அல்லு அர்ஜுனின் புஷ்பா வெளியாகும். விஜய்க்கு கேரளாவில் இருக்கும் மாஸ் காரணமாக மற்ற இரு படங்களை பீஸ்ட் எளிதாக முந்தும்.

  தமிழகத்தில் பீஸ்டுடன் ராதே ஷ்யாம் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் பிரபாஸின் படம் பீஸ்டுக்கு ஒரு சவாலே அல்ல. தற்போதைய நிலவரப்படி ஆந்திரா, தெலுங்கானா மட்டுமே பீஸ்டின் பொங்கல் வெளியீட்டுக்கு சிக்கலாக உள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: