முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Samantha: ஆண்களை அவமானப்படுத்துகிறதா சமந்தா பாடல்? கிளம்பும் எதிர்ப்பு...

Samantha: ஆண்களை அவமானப்படுத்துகிறதா சமந்தா பாடல்? கிளம்பும் எதிர்ப்பு...

சமந்தா

சமந்தா

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடலின் லிரிக் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

  • 1-MIN READ
  • Last Updated :

அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் சமந்தா இடம் பெறும் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, மலையாள நடிகர் ஃபகத் பாசில் இதில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

மேலும் பார்க்க - நடிகர் கார்த்திக் குமார், அம்ருதா ஸ்ரீனிவாசன் திருமண படங்கள்!

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடலின் லிரிக் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் பாடல் தற்போது வரை 21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பாடலில், ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகக் கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Samantha