Home /News /entertainment /

ஷங்கரால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறுவதில் மீண்டும் சிக்கல்

ஷங்கரால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறுவதில் மீண்டும் சிக்கல்

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

ஷங்கர் மறுத்ததால் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியன் 2 படத்தின் மீதிப்பகுதிகளை இத்தனை நாளில், இத்தனை ரூபாய் பட்ஜெட்டில் முடிப்பேன் என்ற ஒப்பந்தத்தில் ஷங்கர் கையெழுத்திட மறுப்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான பிறகு எல்லாமே தலைகீழானது. தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் தெலுங்கில் ராம் சரண் படம், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ரீமேக் என்று இந்தியன் 2 படத்திலிருந்து மற்ற மொழிகளுக்கு தாவினார் ஷங்கர். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று லைகா நீதிமன்றம் சென்றது. ஆனால், அப்படி தடைவிதிக்க முடியாது என தீர்ப்பு ஷங்கருக்கு சாதகமாக அமைய, ராம் சரண் படத்தில் அவர் கவனம் செலுத்தினார்.

    இந்நிலையில், வடிவேலுவுடன் ஷங்கருக்கு இருந்த பஞ்சாயத்தை லைகா சுமுகமாக முடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள பகுதிகளை முடிப்பதென தீர்மானமானது. கமல், விக்ரம் மற்றும் பிக் பாஸில் பிஸியாக இருப்பதால் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்தனர். மீதமுள்ள காட்சிகளை முடிக்க எத்தனை கோடிகள் தேவை, எத்தனை தினங்களில் முடிப்பீர்கள் என எழுதி கையெழுத்து இட்டுத்தர லைகா ஷங்கரிடம் கேட்டுள்ளது. அதற்கு ஷங்கர் மறுத்ததால் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஏவிஎம் நிறுவனம் ஒரு படத்தை தொடங்கும் போதே வெளியீட்டு தேதியை அறிவிக்கும். அத்தனை கச்சிதமாக புரொடக்ஷனை நிர்வகிப்பார்கள். அவர்கள் ஷங்கரை வைத்து சிவாஜி படத்தை எடுக்கையில், அப்படி எந்த வெளியீட்டு தேதியையும் அறிவிக்கவில்லை. படம் எப்போது முடியும் என்று ஷங்கர் தீர்மானமாக கூற முடியாது என்பதை ஏவிஎம் ஏற்றுக் கொண்டு தான் சிவாஜி படத்தையே தொடங்கினார்கள். ஆகவே ஷங்கர் லைகாவின் கோரிக்கைக்கு உடன்படாததில் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

    அதேநேரம், தெலுங்கில் ராம் சரண் படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பு நாள்கள் என அனைத்தையும் எழுதிக் கொடுத்து, ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஷங்கர். தெலுங்குப் படத்துக்கு பட்ஜெட்டும், படப்பிடிப்பு நாள்களும் தர முடியும் என்றால் தமிழ் படத்துக்கு மட்டும் ஏன் முடியாது என்று லைகா தரப்பு கேள்வி எழுப்புகிறது.

    இந்தியன் 2 பஞ்சாயத்தை வைத்து பத்து படங்கள் எடுக்கலாம். என்ன ஒன்று, படுபயங்கர ஹாரர் படமாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி