Home /News /entertainment /

Captaion Miller: கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்!

Captaion Miller: கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன்

தற்போது தனுஷ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அட்டகாச அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

    தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் வாத்தியாராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

    இந்தப் படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் தனுஷ். 1930-40 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் படம் இயக்கப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சாணிக் காயிதம், ராக்கி ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார்.



    வெற்றிமாறனின் விடுதலை மேக்கிங் ஸ்டில்ஸ்!


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அட்டகாச அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறாராம்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush, Priyanka Mohan

    அடுத்த செய்தி