Home /News /entertainment /

பிக் பாஸுக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக பிரியங்கா... எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிக் பாஸுக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக பிரியங்கா... எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிரியங்கா

பிரியங்கா

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரியங்காம் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

    விஜய் டிவி பிரியங்கா மீண்டும் தொகுப்பாளினியாக களம் இறங்கியிருக்கிறார். பிரபல நிகழ்ச்சியில் அவர் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம். முக்கியமாக நிகழ்ச்சியில் தன்னை யார் என்ன சொன்னாலும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்.

    டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தனக்குப் பிடித்த விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்த பிரியங்கா, பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

    நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர், தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்காவின் ஆஸ்தான நிகழ்ச்சியான, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது. அதில் மாகாபா-வுடன் இணைந்து, மைனா நந்தினி தொகுத்து வழங்கினார். இதையடுத்து மீண்டும் சூப்பர் சிங்கர் செட்டுக்கு எப்போது பிரியங்கா வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் பிரியங்கா. அங்கு பின்னணி பாடகி பிரியங்காவுடன் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி