இனி ’பிரியங்கா சோப்ரா ஜோனஸ்’! பெயரை அப்டேட் செய்த புதுமணப்பெண்

பிரியங்கா சோப்ரா திருமணத்துக்குப் பின்னர் தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் என மாற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 4:20 PM IST
இனி ’பிரியங்கா சோப்ரா ஜோனஸ்’! பெயரை அப்டேட் செய்த புதுமணப்பெண்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி
Web Desk | news18
Updated: December 7, 2018, 4:20 PM IST
அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த நடிகை பிரியங்கா சோப்ரா தனது பெயரை ‘பிரியங்கா சோப்ரா ஜோனஸ்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார்.

ஐந்து நாள் கொண்டாட்டமாக இந்தியாவில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்ற பிரியங்கா சோப்ரா உலக மக்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார். இந்த சூழலில் அமெரிக்காவின் ‘கட்’ என்னும் இதழ் பிரியங்கா சோப்ரா காதலால் நிக் ஜோன்ஸை திருமணம் செய்யவில்லை என்றும் ப்ளான் செய்தே இந்தத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் என்றும் விமர்சனக் கட்டுரை வெளியிட்டது. இதற்கு சர்வதேச அளவில் மிகுந்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவியவே ‘கட்’ இதழ் மன்னிப்புக் கோரியது.

இதுகுறித்து பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர், “எனது வாழ்நாளில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளேன். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் பவர்ஃபுல் பெண்கள் பட்டியலில் இரண்டாம் முறையாக இடம்பெற்றுள்ளேன். இது மிகவும் பெருமை அளிப்பதாக உள்ளது. ஃபோர்ப்ஸ் இதழுக்கு எனது நன்றிகள்.

இத்தகைய மகிழ்ச்சியான சூழலில் நான் வேறு எதைப் பற்றியும் கவனிக்கப்போவதில்லை. சில அற்ப விஷயங்கள் எனது மகிழ்ச்சியைக் குறைக்காது” எனப் பதிலளித்தார்.

மேலும் பார்க்க: மேடையில் திடீரென்று மயங்கி விழுந்த அமைச்சர் நிதின் கட்காரி
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்