4 அருங்காட்சியங்களில் மெழுகுச்சிலை... பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவம்...!

சர்வதேச அளவில் நடிகை ஒருவருக்கு அருங்காட்சியகத்தின் நான்கு கிளைகளில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

4 அருங்காட்சியங்களில் மெழுகுச்சிலை... பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவம்...!
பிரியங்கா சோப்ரா
  • News18
  • Last Updated: February 8, 2019, 4:40 PM IST
  • Share this:
உலகின் நான்கு முக்கிய நகரங்களில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகங்களில் நடிகை பிரியங்கா சோப்ராவைக் கவுரவப்படுத்தும் விதமாக மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் நடிகை ஒருவருக்கு அருங்காட்சியகத்தின் நான்கு கிளைகளில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

கோலிவுட்டில் தொடங்கிய பிரியங்கா சோப்ராவின் வெற்றிப் பயணம் இன்று ஹாலிவுட்டில் எதிரொலித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டுள்ளார் பிரியங்கா.


தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்களில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா கடந்த வியாழக்கிழமை நியூயார்க் நகரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனது உருவ மெழுகுச் சிலையைத் திறந்துவைத்தார்.

நியூயார்க் நகருக்கு முன்னரே லண்டன், சிட்னி, ஆசியாவில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகங்களில் பிரியங்காவின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 4 அருங்காட்சியகங்களில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்ட உலகின் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. இதற்கு மூன்று சிலைகள் அமெரிக்க பாடகி விட்னி ஹவுஸ்டன்-க்கு அமைக்கப்பட்டு இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க: திமுக, அதிமுக இரண்டுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள்-கமல்ஹாசன்
First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்